சராசரியாக 4% குறைவு — ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு CHF 53 வரை சேமிப்பு
சுவிட்சர்லாந்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வீட்டு மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக சுமார் 4% குறையவுள்ளன. சுவிஸ் மின்சார ஒழுங்குமுறை ஆணையமான ElCom, செப்டம்பர் 8 அன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எவ்வளவு குறையும்?
ஆண்டுக்கு 4,500 kWh மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வழக்கமான குடும்பத்தை எடுத்துக்கொண்டால்:
2027 கட்டணம்: 26.5 Rappen/kWh
2026-ஐ விட குறைவு: 1.2 Rappen/kWh
ஆண்டு மின்சாரக் கட்டணம்: சுமார் CHF 1,194
ஆண்டு சேமிப்பு: சுமார் CHF 53.
ஏன் கட்டணம் குறைகிறது?
மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான செலவு குறைவதே முக்கிய காரணமாகும். குறிப்பாக அதிக விலையிலான பழைய கொள்முதல் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருவதால் பல மின்சார நிறுவனங்களின் energy tariff குறைகிறது. அதேநேரம் network tariff மற்றும் measurement tariff சிறிதளவு அதிகரிக்கின்றன.
⚠️ அனைவருக்கும் 4% குறையுமா?
இல்லை. 4% என்பது சுவிட்சர்லாந்து முழுவதற்குமான Median மதிப்பு. நாட்டிலுள்ள சுமார் 580 மின்சார வலையமைப்பு நிறுவனங்களின் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எனவே நீங்கள் வசிக்கும் Gemeinde மற்றும் மின்சார வழங்குநரைப் பொறுத்து உண்மையான கட்டணம் மாறுபடும்.


