(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ரண்விமன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் முற்று முழுதாக நிறைவுபெற்ற வீடொன்றினைத் திறந்து வைத்து உரிய பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (04) நிந்தவூரில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது முற்று முழுதாக நிறைவுபெற்று கையளிக்கப்பட்ட வீட்டின் பயனாளிக்கு ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதியும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் பயனாளிகள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நிந்தவூர் சமூர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.சித்தீக், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம். சம்சுன் அலி, இப்திகார் அஹமட், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெஸீல், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி அமைப்பின் தலைவர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிருவாகிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


