பிரதேச மட்ட பாேதைப்பாெருள் தடுப்புக் குழு கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாம் காலாண்டிற்கான பிரதேச மட்ட பாேதைப்பாெருள் தடுப்புக் குழு கூட்டம் , பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பிரதசே ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் அண்மையில் (02.09.2026) பிரதேச செயலக மாநாட்டு நடைபெற்றது.

இந்தநிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர்,பிரதேச சபையின் உறுப்பினர்கள் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள்,மற்றும் பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்
பிரதேசத்தில் காணப்படும் பாேதைப்பாெருள் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை பாேன்ற விடயங்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தாெடர்பாக கலந்துரையாடப்பட்டது.