சுற்றுச்சூழல் நட்பு விமான எரிபொருள்
Villigen, 02.09.2026
விமானப் போக்குவரத்தால் ஏற்படும் CO₂ வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில், சுவிட்சர்லாந்தில் செயற்கை விமான எரிபொருளை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் சோதனைக்கு வந்துள்ளது.
Paul Scherrer Institute (PSI) மற்றும் Zürich-ஐச் சேர்ந்த Metafuels நிறுவனம் இணைந்து உருவாக்கிய “Aerobrew” தொழில்நுட்பத்திற்கான புதிய demonstration plant, Villigen-இல் உள்ள PSI வளாகத்தில் ஆகஸ்ட் 20 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த முறையில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம், தண்ணீர் மற்றும் CO₂ ஆகியவை அடிப்படை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் தண்ணீரிலிருந்து Hydrogen தயாரிக்கப்பட்டு, அது CO₂ உடன் இணைக்கப்பட்டு Green Methanol ஆக மாற்றப்படுகிறது. பின்னர் சிறப்பு catalysts உதவியுடன் இந்த Methanol, விமானங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய Synthetic Kerosene ஆக மாற்றப்படுகிறது.
PSI தகவலின்படி, Methanol-இலிருந்து செயற்கை விமான எரிபொருள் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய செயல்முறைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் உலகின் முதல் சோதனை நிலையம் இதுவாகும்.
புதிய நிலையம் தற்போது நாளொன்றுக்கு அதிகபட்சமாக 50 லிட்டர் Sustainable Aviation Fuel (SAF) தயாரிக்கும் திறன் கொண்டது. இது தொழிற்துறை அளவிலான உற்பத்தி அல்ல. தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக இயக்கி சோதித்து, எதிர்காலத்தில் பெரிய உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த செயற்கை எரிபொருளின் மற்றொரு முக்கிய அம்சம், தற்போதுள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் எரிபொருள் கட்டமைப்புடன் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்படுவதாகும். இதனால் விமானங்களின் இயந்திரங்களையும் முழு infrastructure-ஐயும் அடிப்படையாக மாற்ற வேண்டிய தேவையைக் குறைக்க முடியும்.
Metafuels நிறுவனம் 2030 முதல் Aerobrew தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதலாவது வர்த்தக உற்பத்தி நிலையத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது.


