மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் (01) மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் (கண்டி வித்யார்த்தா கல்லூரி அருகில்) நடைபெற்றது. இதன்போது அதிகமானோர் வருகைத் தந்து இரத்த தானம் வழங்கினர். ஒருவரின் இரத்தத்தின் ஒரு துளி மற்றொரு உயிரைக் குணப்படுத்தும் ,ஒரு உயிரைக் காப்பாற்றும் எனும் உன்னதமான மனிதாபிமானப் பணியில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர். இம்முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தினூடாக விசேட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தின் தலைவர் என்.பி.நாலக்க ஜயதிலக்க, உபதலைவர் தெஹிகஸ்தென்ன, அதன் பணிப்பாளர்கள், செயலாளர், முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.


