மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளராக ரி.என்.சூரியராஜா நியமனம்

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்திற்கு தற்பொழுது அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளராக ரி.என்.சூரியராஜா நியமிக்கப்பட்டு தனது பணியை பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே இவர் மன்னாருக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையிலும் இரண்டாம் நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலும் கல்வி கற்றார்.

அதன்பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளமானி சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து தனது முதுமானிப் பட்டங்களை (எம்ஏ) பின்வரும் பல்கலைக்கழகங்களில் நிறைவு செய்தார்:

பிராந்திய திட்டமிடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்- சமூகவியல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும்- எம்எஸ்சீ பட்டங்களை உயிரியல் பொறியியலpல் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் அனர்த்த முகாமைத்துவத்தில்: கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றிருக்கின்றார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது அரச சேவையினை ஆரம்பித்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
:
இதைத் தொடர்ந்து கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு உதவிப் பணிப்பாளராகவும்- வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளரhகவும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளரhகவும் கடமை ஆற்றிய இவர் இதைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கடமை ஆற்றிய நிலையிலேயே

2017 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த கனகரெத்தினம்; திலீபன் தற்பொழுது வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையிலேயே மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ புதிய பிரதிப் பணிப்பாளராக ரி.என்.சூரியராஜா நியமிக்கப்பட்டு தனது பணியை பொறுப்பேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.