Switzerland-இல் மிகவும் பிரபலமான மொபைல் கட்டண சேவையான TWINT, 2027 முதல் Recurring Direct Debit எனப்படும் தொடர்ச்சியான தானியங்கி கட்டண வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய வசதியின் மூலம் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், மின்சாரக் கட்டணம், சந்தா கட்டணங்கள் போன்ற தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய தொகைகளை TWINT App-இல் ஒருமுறை அமைத்துவிட்டால், பின்னர் அவற்றை நேரடியாக நிர்வகிக்க முடியும்.
Switzerland முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வங்கிகள் TWINT சேவையை ஆதரிக்கின்றன. தற்போது சுமார் 6 மில்லியன் பேர் TWINT-ஐ பயன்படுத்துகின்றனர்.
இந்த புதிய முறை, காகித அடிப்படையிலான அனுமதிப் படிவங்களைக் குறைத்து, கட்டணங்களை மறந்து விடும் அபாயத்தையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள LSV+ Direct Debit முறை 30 செப்டம்பர் 2028 அன்று நிறுத்தப்படவுள்ளது. அதற்கு மாற்றாக புதிய டிஜிட்டல் Direct Debit முறையை TWINT உருவாக்குகிறது.


