மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக,
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட உளவள துணை இணைப்பாளர் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குறித்த கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) திகதி இடம்பெற்றது.

சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தின் போது கடந்த கால முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் போது 18 வயதிற்கு குறைந்த சிறார்களை வேலைக்கு அமர்ந்துவது, சிறுவர் இல்லங்களின் தேவைப்பாடுகள் அவற்றை நிருவகிப்பதில் காணப்படும் இடர்பாடுகள்,
சறோஜா வேலைத்துட்டம்,
கட்டாய கல்வி குழு, கோட்ட மட்ட கல்விக்குழு ஆகியவற்றின் எதிர்கால மற்றும் நிகழ்கால செயற்றிட்டங்களின் முன்னேற்றம், அரசினால் முன்னெடுக்கப்படும் திவியட்ட சவிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு முன் பள்ளி பிள்ளைகளுக்காக வழங்கப்பட் டுவரும் நலன் திட்டங்கள் மற்றும் கற்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப் பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டும் வரும் சிறுவர் இல்ல பராமரிப்பு தொடர்பாகவும் மாவட்ட ரீதியாக தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகம் மாவட்ட இணைப்பாளரினால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும், சிறுவர் பாதுகாப்பை மையமாக கொண்டு நடாத்தப்பட்டுவரும் சிறுவர் அம்பசிட்டர் திட்டம் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மனோகரி திட்டம் தொடர்பாகவும்,
வாகரை பிரதேசத்தின் பொலிசில் சிறுவர் மகளிர் பிரிவில் பெண் உத்தியோகத்தர்கள் இல்லாமை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும் அதற்காக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களும் தமது நிலைப்பாடுகள் மற்றும் ஆலோச னைகளையும் இதன்போது முன்வைத்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கசுகாதார துறைசார்ந்த அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.