கல்முனையில் சிரேஸ்ட சுகாதார உதவியாளர் ஒருவரின் வாக்குமூலம்

(வி.ரி. சகாதேவராஜா)
சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனை
கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அதன் போது அவர்கள் பலவித கருத்துக்களையும் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகங்களில் கூறியிருந்தனர்.

சிரேஸ்ட சுகாதார உதவியாளர் ஒருவரின் வாக்குமூலம் இதோ:

அனைவருக்கும் காலை வணக்கம்.
எங்கள் வைத்தியசாலையிலே 2026.08.06 ஆம் தேதி மூவின சிற்றுழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டார்கள்.
நாங்கள் இங்கு 21 வருடகாலம் பணிசெய்பவர்கள்.

இதுவரை காலமும் எங்களுக்கென்ற சீருடைகள் இதுதான் என்ற அடிப்படையில் எங்களுக்கு சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்டுங் கூட நேற்று வந்த அவங்க அவர்கள் உடையில் வந்திருப்பது கவலைக்குரியது.

அந்த அப்பாயின்மென்ட் கடிதம் எடுக்கும் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கும் உடைகளே அணிய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

அப்படி கூறப்பட்டிருந்த போதும் எங்களது வைத்தியசாலையில் வந்த சிலர் எங்களை குழப்புவதன் நோக்கத்தோடு அவர்களுடைய கலாசார உடையைத்தான் நாங்கள் அணிவோம். இதுதான் எங்களுடைய கலாச்சாரம் என்று சொல்லி எங்களை இழிவுபடுத்தினார்கள். கூடவே எமது வைத்தியசாலையின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த ஒரு குழுவினர் செயற்படுகிறார்கள்.

இங்கு வரும் நோயாளர்களுக்கு காலா காலமாக இனவாத பேதமின்றிதான் வைத்தியசாலையில் வைத்தியர்கள்சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நாங்களும் புதிய அவர்களும் போகக்கூடிய இடங்களில் நோயாளர்கள் பார்ப்பார்கள் இது என்னது? முஸ்லிம்கள் ஒன்று, தமிழ் ஒன்று என்ற மாதிரி சீருடையை வேறுபடுத்தி காட்டுகிறார்கள் என்று.அந்த வேறுபாடுகள் இங்கு இருக்கக்கூடாது. இந்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் இப்படியொரு வேறுபாடு நாங்கள் பார்த்ததுமில்லை, கண்டதுமில்லை. அப்படி இருந்ததுமில்லை. இனியும் இருக்காது.
நாங்கள் கடமையில் அமர்த்தப்பட்டு 21 வருடங்கள் ஆகின்றது.
ஆனால் எங்களுக்குள் ஒரு பாகுபாடுமில்லை. பல கலாச்சாரமுள்ள பிள்ளைகள் எங்களுடன் வேலை செய்கிறார்கள். ஆனால் நாங்கள் இதுவரைக்கும் அவர்களோட எங்களுடைய சகோதரங்கள் மாதிரிதான் நாங்கள் இதுவரையும் நடந்து கொண்டு வருகிறோம். பழகுகின்றோம்.

ஆனால் சிலர் வெளியிலிருந்து எங்களது உடைகள் அது இப்படி அப்படி இப்படி என்று சொல்லி நிறைய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த விஷயங்கள் எதுவுமே இங்கு வரக்கூடாது. எங்களுக்கென்று வழங்கப்பட்ட சீருடையைத்தான் நாங்கள் உரிமையாக கேட்கிறோமே ஒழிய நாங்கள் புதிதாக நாங்கள் ஒரு யூனிஃபார்மோ இல்லை சீருடையோ அணிங்க என்று நாங்கள் சொல்லவில்லை.

இந்த சீருடை எங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை இது. எங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை இன்னொருதர் பிற ஆட்கள் இதனை கையில் எடுக்கக்கூடாது. ஏனென்றால் எங்களுக்கு வழங்கப்பட்ட உடையில் தான் நாங்கள் இதுவரை காலமும் கடமை புரிந்து வருகிறோம்.

இதை கருத்திக்கொண்டு எங்களுக்கென்று யூனிஃபார்ம் அலவன்சும் தராங்க. சீருடைக்குரிய நாங்கள் அதன்படித்தான் நாங்கள் இதுவரை காலமும் இந்த கடமையில் அணிந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மாறாக வேறு எந்த ஒரு பிரச்சனைகளும், தீய சக்திகளும் இதற்குள் பூந்து இனவாதம் பேசி குழப்ப வேண்டாம். நாங்கள் இதுவரை காலமும் நோயாளருக்கு இனமத பேதமின்றி நல்ல சிகிச்சை வழங்கிக்கொண்டுதான் வருகிறோம்.

இதுவரை எங்களுக்கு நிறைய பணிப்பாளர்கள் வந்து போய் உள்ளார்கள். ஆனால் எங்களுடன் எல்லா பணிப்பாளர்களரும் இனவாத பேதமின்றி தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு வழங்கப்பட்ட சீருடையை நாம் அணிந்து இனவாத பேதமின்றி எங்களது கடமை செய்யறதுக்கு எங்களது நிர்வாகம் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு தந்தது.
நாங்களும் அந்த உடையில் தான் இதுவரை காலமும் வேலை செய்கிறோம் என்பதையும் கருதிக்கொண்டு எங்களுக்கு நல்லதொரு முடிவையும் நல்லதொரு தீர்மானத்தையும் தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.