( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026
பாரிய சமூக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவரில் நாம் அடிமையாகுவதும் ஆசீர்வாதத்தில் எம்மை தாழ்த்திக் கொள்வதும் மிக மிக முக்கியமானது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தனது மறையுரையில் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கதும் உலகம் பூராகவும் புகழ் பெற்று விளங்கும் யாத்திரிகர் ஸ்தலமாகவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விழாவாகவும் மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா சனிக்கிழமை (15.08) நடைபெற்றபோது இதில் மறையுரை ஆற்றிய மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மேலும் தெரிவிக்கையில்
வாழ்க்கையில் முழுமை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திங்கும் பொழுது ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துக்குள் வைக்கப்படும்’ என்று வள்ளுவன் சொன்னார்.
இவ் வையகத்திற்குள் எவ்வாறான வாழ்வு வாழப்படுகின்றதோ அதற்கொப்ப அவன் மறு உலகில் தெய்வத்துக்குள் வைக்கப்படுவான்.
இதை நாம் சிந்திக்கும்போது வாழ்க்கை தத்துவத்தை முழுமையாக சுவைக்கின்றவன் இதைப்பற்றி அறிஞன் ஒருவன் கூறுகின்றார் வாழ்க்கை என்பது எதையோ மாறி மாறி பிடிக்க முற்பட்டு ஒன்றையும் பிடிக்காது பிடிக்கவும் முடியாது சாவதுதான் வாழ்வு என கூறுகின்றான்.
ஒன்றையும் பிடிக்காத இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்கும் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரனும் பற்றற்றவருமான இறைவனை பற்றிக் கொள்வது பிடிப்பது எமது விசுவாசத்தில் பொறுத்த மட்டில் இது சாகாத வாழ்வு ஆகும்.
தெய்வத்திற்குள் வைக்கப்படுவதற்காகவே இறை மகன் இயேசு சொன்னார் என்னை நேசிப்பவன் நித்தியத்திலும் வாழ்வான். இந்த உலகம் தீமையானது பாவத்தின் விளை நிலமாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட இந்த உலகத்தில் வாழ்வை- எதிர்பார்க்கின்ற வாழ்வை- வானுலகத்தில் வைக்கப்பட வேண்டிய வாழ்வை எப்படி பெற்றுக் கொள்வது.
மரியாளின் வாழ்வு அனுபவம்; இதோ ஆண்டவரின் அடிமை என்றாள் மரியாள் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பது இலேசான காரியம் அல்ல. ஆண்டவருக்குள் எம்மை நாம் தாழ்த்திக் கொள்வது அதுதான் அடிமை தனத்தின் வாழ்வு. இது ஒரு சவால் நிறைந்த வாழ்வு இதைத்தான் மரியாள் பற்றிக் கொண்டாள்.
இந்த அருங்கொடைக்குள்தான் நம் ஆண்டவருக்கு அஞ்சி நடக்க எம்மை தூண்டுகின்ற ஒரு வாழ்வு எம்மை தலைமுறை தவைமுறையாக வழி நடத்துகின்ற வாழ்வு. மரியாள் தனது வாழ்க்கை அனுபவத்தை நற்செய்தியூடாக எல்லோருடனும் பகிர்ந்த கொள்ளுகின்றாள்.
இதைத்தான் ஆண்டவரின் இரக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம். அவருடைய தோல் வலிமையை கண்டு கொள்ளுகின்றோம். இதோ ஆண்டவரின் அடிமை என அர்ப்பணம் செய்தால் இந்த வலிமையை நாம் கண்டு கொள்ளலாம்.
;.
பாரிய சமூக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவரில் நாம் அடிமையாகுவதும் ஆசீர்வாதத்தில் எம்மை தாழ்த்திக் கொள்வதும் மிக மிக முக்கியமானது
இதோ ஆண்டவரில் அடிமை என சொன்ன மரியாள் இவ்வாறான சமூக மாற்றத்தை அவள் எற்படுத்தினாள் என்றால் அந்த வல்லமை செருக்குற்றவரை சிதரடிக்கும் வலியோரை அரியணையிலிருந்து தூக்கி எறியும். தாழ்ந்தோரை உயர்த்தும். பசித்தோரை நலன்களால் நிரப்பும். செல்வோரை வெறுங்கையாக்கும். எமது மூதாதையினருக்கு ஆசீர் வழங்கும்.
இப்படிப்பட்ட அருங்கொடை கொண்ட வாழ்வை எம்மால் வாழ முடியுமா? இதை நாம் சிந்திப்போம் ஆனால் இப்படியான பரிசுத்த வாழ்வை கடவுளுக்கு அடிமையாக சீவித்து கடவுளின் அருங் கொடைகளை அனுபவித்து எளிமையான வாழ்வாக சாட்சியம் பகிர்ந்து ஆண்டவருக்கு அஞ்சி நடந்து இறை இரக்கத்தை மாசு மறுவற்றவளாக அனுபவித்து அழிவுறும் உலகம் தீண்டா வண்ணம் உடலோடும் ஆன்மாவுடனும் விண்ணுலகம் எடுக்கப்பட்டு விண்ணரசியாக வீற்றிருக்கின்றாள் அன்னை மரியாள்.
இப்படியான வாழ்வு இந்த உவகத்தில் சாத்தியமானதாகும். இயேசு விண்ணுலகம் சென்று தனது தாய்க்கு விண்ணுலகத்தில் ஆயத்தம் செய்து வைத்திருந்தார். விண்ணுலக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டாள்.
இயேசுவையும் மரியாளையும் இந்த உலகம் தீண்ட முடியவில்லை. ஆகவே இருவரும் இறைவனின் சித்தத்தின்படி இறைவனுக்கு கீழ்படிந்தவர்கள். ஆண்டவருக்கு நாம் அடிமையாக்குவதும் இதன்மூலம் தாழ்ச்சிக் கொள்வதும் இறை சித்தத்தை நிறைவேற்ற எம்மை இது தூண்டுகின்றது. இதன் விளைவு சமூகத்திலே பெரும் மாற்றம் எற்படுத்துகிறது.
மரியாள் விண்ணக வீட்டுக்கு ஒரு வாசலாக இருக்கின்றாள் எமது வாழ்வு நிலையான வாழ்வாக இருக்க வேண்டுமானால் இந்த உலகத்தில் எமது வாழ்வு வாழ்வாங்கு வாழ்வாகவும் இந்த உலகத்திற்கு பின்பு நித்தியத்தில் வாழவைக்கும் வாழ்வாகவும் அழியாத ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வாகவும் இருக்க வேண்டுமானால் நாம் மரியாளின் அடிச்சுவட்டில் வாழ அழைக்கப்படுகின்றோம்.
பழைய ஏவாளால் மூடப்பட்ட விண்ணக வாயில் புதிய ஏவாளாக ஆண்டவரின் அடிமையான மீட்பின் தாயாக பாவத்தையும் சாபத்தையும் ஒழித்த இயேசுவின் தாயான தொடக்கமும் முடிவும் அற்ற வாயிலை அன்னை மரியாள் திறந்து வைத்தாள்.
அளவுக்கடந்த அன்பை சுவைத்த அன்னை மரியாள் இன்று எம்மையும் இந்த மடு பதிக்கு அழைத்திருக்கின்றாள். இது ஆண்டவரின் அழைப்பு இந்த அழைப்பில் மரியாளைப் போன்று இதோ அண்டவரின் அடிமை என்று நாமும் எம்மை தாழ்த்திக் கொள்வோம்..
தாழ்ச்சியை இரக்கத்தை வேண்டி எமது ஆன்மா பாதுகாக்கப்பட அன்னையின் அடிச்சுவட்டில் எமது வாழ்வு அமைய மடு அன்னையை நோக்கி வேண்டுவோமாக இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தனது மறையுரையில் தெரிவித்தார்.


