நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
அதன்படி,மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும், வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


