ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 52-வது வருடாந்த விளையாட்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 52-வது வருடாந்த விளையாட்டு விழா, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லடி உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது..

விழாவுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் கலந்து சிறப்பித்தார் .

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி. மேகராஜ் , மக்கள் வங்கி ஓய்வுநிலை உதவி பிராந்திய முகாமையாளர் ஜே.ரவீந்திரராஜா மற்றும் பாலமீன் மடு பிரதேச வைத்திய சாலை பல்வைத்திய நிபுணர் திருமதி மஞ்சுளா ரவீந்திரராஜா ஆகியோர் பங்கேற்று இருந்தனர் .

சிறார்களின் உடற்கண்காட்சி (Physical Display): குழந்தைகளின் கண்ணைக் கவரும் உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

பாலர் பாடசாலை ஆசிரியர்களின் சிறப்பான நெறிப்படுத்தலில் போட்டிகள் அனைத்தும் இனிதே நடைபெற்றன. பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.