கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தின் சத்தியப்பிரமாண உறுதியுரை நிகழ்வு 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (27) அன்று நடைபெற்ற து.

பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ் பாபு தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்ற நிகழ்வில்,

“சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை” எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ்வாரத்தின் (ஜுலை 27 – 31) முதல் நாள் இந்நிகழ்வில், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம்” – கிளீன் சிறிலங்கா தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தும் முகமாக அரச சேவையினது தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களின் அடிப்படையில் இவ்வார முதல் நாள் நிகழ்வு சத்திய பிரமாண உறுதியுரையுடன் ஆரம்பமானது.