கோறளைப்பற்று மத்தியில் “தேசிய நேர்மை வார” நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வார்த்தை முன்னிட்டு தேசியக்கொடியேற்றப்பட்டு உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு (27) பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

“சட்டத்தை மதிக்கும் நேர்மைமிக்க அரச சேவை” எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ்வாரத்தின் (ஜுலை 27 – 31) முதல் நாள் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் தலைமையில் சிறப்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம்” – கிளீன் சிறிலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துமுகமாக இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பினைக்கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களின் அடிப்படையில் இவ்வார முதல் நாள் நிகழ்வு இன்று சத்தியப்பிரமாண உறுதியுரையுடன் ஆரம்பமானது.