குருமகான் அவர்களின் சுவிற்சலாந்து வருகையும்
மக்கள் மனதில் ஏற்பட்ட ஆனந்த அலைகளும்
காலம்காலமாக எண்ணரிய ஞானிகளும் சித்தர்களும் பாரதநாட்டில்
அவதரித்து மனிதகுல ரூடவ்டேற்றத்திற்கு வழிகாட்டிகளாக திகழந்து
மனித வாழ்வை செம்மைப்படுத்தி மேன்மையுற செய்து
வந்துள்ளார்கள்.
அவர்களை தொடர்ந்து இன்றைய உலகில்
ஞானவள்ளல் பரஞ்சோதிமகான் அவர்களுடைய சீடரும் தென்கயிலை
திருமூர்த்திமலையில் உள்ள உலக சமாதான ஆலயம் ஸ்தாபகரும் உலக
சமாதான தூதுவருமாகிய குருமகான் அவர்களுடைய யோகா பயிற்சி
வகுப்பும் அதனை தொடர்ந்து சத்சங்க நிகழ்வும்
சுவிற்சலாந்து நாட்டில் சூரிச் மாநகரில் கடந்த சனி ஞா
யிறு ஆகிய தினங்களில் யோகா பயிற்ச்சி கலைகளும் அதனை
தொடர்ந்து சத்சங்க நிகழ்வும் இடம்பெற்றது.

சூரிச் நிகழ்வுகளை தொடர்ந்து திங்களன்று காலைவேளையில்
ஒஸ்ரியா நாட்டிலுள்ள தீபத்திய மததலைவர் தவத்திரு தலாய் லாமா
அவர்களின் பௌத்த மத ஆச்சிரமத்திற்கு விஜயத்தினை
மேற்கொண்டு அங்கேயுள்ள பௌத்தமத துறவிகளுடன் உரையாடி
தியானத்தினை மேற்கொண்டிருந்தார். திங்களன்று பிற்பகல்
செங்காலன் மாநிலத்திலுள்ள ஓர் மண்டபத்தில் செங்காலன்
கதிர்வேலாயுதசுவாமி ஆலய முன்னைநாள் தலைவரும்; அணைத்துலக
முருகபக்தி ஏற்பாட்டாளருமாகிய திரு வேலுப்பிள்ளை
கணேசகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
வேல்வழிபாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தமை
குறிப்பிடத்தக்கது.
பாரதியார் பாடலொன்றில்
ஷஷ விசையுறு பந்தினைப்போல் உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீசுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?
பாரதியார் பாடலுக்கேற்ப ஓர் மனிதன் ஆனந்தமாக வாழ்வதற்கு
நல்ல உடல்இஅலைபாயாத மனம்ரூபவ்ஆற்றல் மிக்க
உயிர்ரூபவ்வைராக்கியமான பக்திரூபவ்அசைவற்ற புத்தி ஆகிய ஐந்து
விடயங்கள் அமைந்திருந்தால் மட்டுமே அவ்மனிதன் ஆனந்தமாக
வாழமுடியும்.

எனவே யோக பயிற்சியின் விளைவாக நல்ல
ஆரோக்கியமான உடல்ரூபவ்தெளிவு குருவின் திருவார்த்தைகளை
செவிமடுப்பதன் மூலமாக மனம் ரூபவ்புத்தி தூய்மைபெற்று
ஆனந்தமான வாழ்க்கையை ஐயமின்றி குருமகான் அவர்களுடைய
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அணைவரும்
பெற்றிருப்பார்கள் என ஆணித்தரமாக கூறலாம்.
யோக பயிற்சியில் பங்கேற்ற அணைவருக்கும் குண்டலினி
யோகாரூபவ் பிராணாயாமபயிற்சிரூபவ் ஜீவரட்சகா போன்ற
முக்கியமான பயிற்சிகளும் பயிற்றுவித்ததுடன் குருமகான்
அவர்களுடைய சத்சங்கமும் இடம்பெற்று முடிவில் நிகழ்வில்
பங்கெடுத்த அணைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி
கௌரவிக்கப்பட்டார்கள்.

இவ் நிகழ்வுகளை தொடர்ந்து அடுத்தநாள் திஙகட்கிழமை பிற்பகல்
ஏழுமணியளவில் செங்காலன் மாநிலத்தில் வேல்வழிபாட்டு
நிகழ்வில் கலந்து உரையாற்றியதுடன் அங்கு வந்திருந்தவர்களுக்கு
ஆசீர்வாதமும் வழங்கியிருந்தார்கள் அவர் தமதுரையில் வேலின்
தத்துவம் ரூபவ்
மனிதர்கள் வாழ்வில் அறிய வேண்டிய ஆன்மீக கருத்துகள்
மிகவும் அழகான முறையில் சிறிய உதாரணங்களுடன் விளக்கி
நகைச்சுவை ததும்ப பேசி அணைவரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்
தக்க விடயமாகும். நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக108
வேல்போற்றி பாராயணம் செய்யப்பட்டு
குருமகான் அவர்களுடைய பிரபஞ்ச நலவாழ்த்தும் பாடப்பெற்று
விழா மங்களகரமாக ஆரம்பமாகியது
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக முருகபெருமானின் ஆறுபடை
வீடுகளில் ஒன்றான பழனியில் பதிணென் சித்தர்களில்
ஒருவரான போகர் நவபாசானத்தை பயன்படுத்தி பழனிமுருகன்
சிலையை வடிவமைத்தார் என்ற செய்தியை பழனிதலவரலாற்று நூல்
தெரிவிக்கிறது .இதனால் பழனி முருகனுக்கு அபிசேகம் செய்யப்
படுகின்ற தீர்த்தமானது பலவித வியாதிகளை குணப்படுத்த வல்ல
மருத்துவ தன்மையுடையது. இதே போன்று இந்த வழிபாட்டில்
பயன்படுத்திய வேலும்
நவபாசானத்தைக் கொண்டு உருவாக்கி குருமகான் அவர்களின் தியான
மண்டபத்தில் வைக்கப்பெற்று சுவிற்சலாந்திற்கு எடுத்து
வரப்பட்டு வழிபாடு நடைபெற்ற செயல் முருனுடைய கருணையே தவிர
வேறில்லை.
ஷஷ லோகா சமஸ்தா சுகினோ பவந்துரூபவ்ரூபவ்
சுவிற்சலாந்திலிருந்து
நல்லதம்பி சரவணப்பெருமாள்


