கதிர்காமத்தில் பலருக்கு தெரியாமல் இருக்கும் இரகசியமான இயந்திரப்பேழை குறித்து இங்கு தருகிறோம்.
கதிர்காம ஆலயத்தின் கருவறையில் முருகனின் சிலையோ அல்லது விக்கிரகமோ கிடையாது என்பதை நாமறிவோம்.
அப்படி என்றால் அங்கு என்ன இருக்கிறது? என்று ஐயம் எழலாம்.
அங்கு இருப்பது ஓர் இயந்திரப்பேழை ஆகும்.
அது பற்றி அறிவோம்.
கல்யாணகிரியார் ஆகர்ஷணம் செய்து தந்த அந்தப் புனிதமான யந்திரப் பேழை (Casket) மட்டுமே அங்குள்ளது.
இந்தியாவிலிருந்து பாதயாத்திரை வந்து முருகப் பெருமானின் தரிசனம் பெற்ற கல்யாணகிரியார் அந்த தெய்வீக ஆற்றலை ஒரு வடிவத்திற்குள் கொண்டுவர விரும்பினார்.
அவர் ஒரு தங்கத் தகட்டில் (அல்லது செப்புத் தகட்டில்) ரகசிய மந்திர எழுத்துக்கள் மற்றும் முக்கோண வடிவியல் அமைப்புகள் கொண்ட “ஷட்கோண சரவணபவ யந்திரத்தை” (Mystic Yantra) தன் தபோ பலத்தால் வரைந்து, அதற்கு உயிரூட்டினார் (ஆகர்ஷணம் செய்தார்).
கதிர்காம ஆலயத்தின் கருவறையில் முருகனின் சிலையோ அல்லது விக்கிரகமோ கிடையாது என்பதை நாமறிவோம்.
கல்யாணகிரியார் ஆகர்ஷணம் செய்து தந்த அந்தப் புனிதமான யந்திரப் பேழை (Casket) மட்டுமே அங்குள்ளது.
அது ஒரு வண்ணத் திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்.
இன்றும் கதிர்காமத்தில் நடைபெறும் பூசைகள் மற்றும் திருவிழாக்கள் பெரஹராவின் போது, இந்த யந்திரம் அடங்கிய பேழையையே யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.
ஆடிவேல்விழா தீர்த்தத்தின்போது பனையோலையால் மறைக்கப்பட்டு யானைமீது மாணிக்ககங்கைக்கு கொண்டு செல்லப்படுவதும் இந்த இயந்திரப்பேழைதான்.
பிறர் அறியாத வண்ணம் பனையோலை சூழ இப் பேழை தீர்த்தமாடுவது வழமை.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு.


