இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


