​​மருதமுனையில் மத்ரஸா மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

(மருதமுனை நிருபர் )

அம்பாறை மாவட்டதில் அல்குர்ஆன் பிரதிகளை வழங்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் JJ பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில், கிழக்கு இளைஞர்கள் அமைப்பு (Eastern Youth Organization – EYO) மற்றும் TM News ஊடக வலையமைப்பு ஆகியன ஒன்றிணைந்து மருதமுனையில் மத்ரஸா மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு (19) முன்னெடுக்கப்பட்டது.
மருதமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்-நஹ்ழா அரபிக் கல்லூரி, சைனப் பெண்கள் அரபிக் கல்லூரி மற்றும் அன்நூர் கல்வி நிலையம் ஆகிய அரபு இஸ்லாமிய மார்க்கக் கல்வி நிறுவனங்களுக்கு புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ், TM News ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.ஷினாஸ் , கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஊடகப் பணிப்பாளரும் TM News ஊடக வலையமைப்பின் சிரேஷ்ட அறிவிப்பாளருமான இசெட்.எம். ஷர்பான், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர் மற்றும் TM News ஊடக வலையமைப்பின் சிரேஷ்ட அறிவிப்பாளருமான அலானி எம் நியாஸ், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர் எம்.சிமர், ஆசிரியர் கே.எம். பாரிஸ் மற்றும் மத்ரஸாக்களின் உலமாக்கள், பொறுப்பதிகாரிகள், நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.