இந்தியாவில் அகதி முகாம்களிலிருந்து தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி.

வாஸ் கூஞ்ஞ)

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும் யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்ந்து யுத்தத்தின் பின்னர் இங்கு மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறிய 71 குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாய் வீடமைப்பு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (07-16) நடைபெற்றது.

இதன் முதற்கட்டமாக மீளக்குடியேறிய 25 குடும்பங்களுக்கு தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் வீடமைப்பு நிதியுதவி மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்ந்து யுத்தத்தின் பின்னர் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கே இவ்வாறு வீடமைப்பு நிதியுதவிகள் தற்பொழுது வழங்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் இழப்பீடுகளோ அல்லது வீடமைப்பு நிதியுதவிகளோ கிடைக்கப் பெறாத 71 குடும்பங்களுக்கு இந்த வீடமைப்பு நிதியுதவி வழங்கப்படுகின்றது.

வீடமைப்புஇ நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இந்த வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்இ யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

இவ்வேலைத்திட்டத்திற்கு இணையாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்புகளை எதிர்கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன்இ மன்னார் பிரதேச செயலாளர் கே. காந்தீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.