தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,101.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி விலை 59.6 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக, இலங்கையிலும் தங்க விலை வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை வீழச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுவதாக வெளிநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.