( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக,
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள சின்னத்துரை சிறிதரன் , நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த அவர், நேற்று (02) வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் முன்னிலையில்
உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முகாமைத்துவ சேவையில் 32 வருட கால அனுபவத்தை கொண்ட சின்னத்துரை ஸ்ரீதரன் இறுதியாக அதே சுகாதார பணிமனையில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிருவாக உத்தியோகத்தரை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.


