எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று (01.07.2026) திகதி தனது கடமையினை உத்தியோக பூர்வமாக பதவியேற்றுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த வைத்தியர் திருமதி.கலாரஞ்ஜனி கணேசலிங்கம் அவர்கள் கடந்த 29.06.2026 திகதி ஓய்வு பெற்றுச் சென்றிருந்த நிலையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளராக கடமையாற்றி வரும் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளராகவும் கடமையாற்றி சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக அளப்பரிய சேவையாற்றி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது


