எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் “திருக்குறள் மாநாடு” கிழக்கு பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் நேற்று (28) இடம் பெற்றது.
மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி “உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்”எனும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது திருக்குறளின் அமைப்பியல், இயல்பியல் தொடர்பான தெளிவூட்டல்களுடன் திருக்குறளை கற்கும் முறை மற்றும் திருக்குறளின் சிறப்புக்கள் தொடர்பான கருத்துக்களை கம்பவாரி ஜெயராஜ் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, இந்து கலாச்சார அலுவலக திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன், அகண்ட தமிழ் உலக பொது செயலாளர் ஏ.தண்டபாணி, தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரத்தினம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


