எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, பிறைந்துறைச்சேனை மற்றும் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்ட “ரன்விமன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.10 இலட்சம் நிதியுதவியை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வழங்கியிருந்தது.
மேலும், சமுர்த்தி கொடி தினம் – 2023 நிதியின் ஊடாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த 12 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, 14 பாடசாலைகளுக்கு தலா மூன்று வீதம் மொத்தம் 42 குப்பைத் தொட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
சமுர்த்தி வங்கியின் ஊடாக “ரன்பத” கடன் திட்டத்தின் கீழ் இரு பயனாளிகளுக்கும், “சவிபல” கடன் திட்டத்தின் கீழ் மேலும் இரு பயனாளிகளுக்கும் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், பொருளாதார வசதி குறைந்த 10 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்ப்பட்டன.
பிரதம அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு அவர்கள் கலந்து கொண்ட, இந்நிகழ்வில், பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் சார்பாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஏ.சி.நியாஸ்தீன் , கோறளைப்பற்று மத்தி கிளீன் சிறிலங்கா இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.சமீம், பிரஜா சக்தி தலைவர்களான அஹமட் இர்ஷாத், எம்பீ.பெளருதீன், எம்.சப்றாஸ், மற்றும் மாவட்ட செயலக தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், விடய உத்தியோகத்தர் உதயகுமார், பிரதேச செயலக தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல். சரீப், வங்கி முகாமையாளர் எஸ். ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு, வறிய மற்றும் தேவைப்பாடுடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் சமூக நலன்களையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டன.


