இல்மனைட் அகழ ஒருபோதும் இடமளிக்க முடியாது! பொத்துவில் பிரதேச சபை தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா)
பொத்துவில் பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் இல்மனைட் உள்ளிட்ட கனிய வளங்கள் அகழ்வதற்கு ஒரு போதும் இடம் அளிக்க முடியாது .

இவ்வாறான தீர்மானம் ஒன்று பொத்துவில் பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்எஸ்எம்.முஷரப் தலைமையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் த.சுபோகரன் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொத்துவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (24) புதன்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

எமது பிரதேச வளங்களை குறிப்பாக கனிய வளங்களை சுரண்ட யாருக்கு அனுமதிக்க முடியாது. சுற்றுலா மையங்களை சுரண்டுவதற்கும் அனுமதிக்க முடியாது என்று தவிசாளர் முஷரப் அங்கு தெரிவித்தார்.