எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் தேசிய செயற்திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு பிரம்ம குமாரிகளின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் சகோதரர் சுரேஸ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தில் இன்று (20) இடம் பெற்றது.
“மனம் எவ்வாறோ, நாமும் அவ்வாறே” என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு
“செழிப்பான மனதின் மூலம் போதைப்பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம் ” எனும் தொனிப்பொருளினூடாக பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் 18 மாத காலத்தினுள் 1 மில்லியன் மக்களை நோரடியாகச் சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் கல்லடி கடற்கரையில் எதிர்வரும் 28 திகதி மாலை 4.30 ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுகளுக்கான தெளிவூட்டல் நிகழ்வு பிரம்ம குமாரிகளின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் சகோதரர் சுரேஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.
தேசிய ரீதியில் இவ் செயற்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளவுள்ள வெளியீடு, போதைப்பொருள் விழிப்புணர்வு பாடல் வெளியீடு மற்றும் ஐந்து வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தல் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையமானது இலங்கையில் 35 வருடங்களாக அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


