( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை நெற் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு . கட்டார் பீனிக்ஸ் விளையாட்டு கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கவிதை மற்றும் சிறுகதை எழுத்துப் பயிற்சி பட்டறையும் செயலமர்வும் நாளை மறுநாள் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவிருக்கும்
இச்செயலமர்வில், இலக்கியத் துறையில் அனுபவமிக்க வளவாளர்கள் கலந்து கொண்டு, கவிதை மற்றும் சிறுகதை எழுத்தின் நுட்பங்கள், படைப்பாற்றல் வளர்ப்பு மற்றும் எழுத்து நடை தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெறுமதியான பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கலந்துரையாடல் மற்றும் அனுபவப் பகிர்வு நிகழ்வுகளும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர் புவி.கேதீஸ் தெரிவித்தார்.


