“ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

“ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளியபடுத்தும் செயலமர்வொன்று இன்று (17) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்திவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு இன்று புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி்
Dr.எம்.ருதேஷன் அவர்கள் கலந்து கொண்டு “ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” எனும் தலைப்பில் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

மேற்படி நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.காயத்திரி ரமேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன், உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த தெளிவூட்டல் நிகழ்வில் அதிகளவிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.