உலக ஆன்மீக கட்டமைப்பு மூலம் 680மாணவர்களுக்கு உதவி

ஐந்து பாடசாலைகளின் உள்ள 680 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு 11.06.2026 அன்று நடை பெற்றது.
இந்த நிகழ்வில்,
மு/சண்முகரத்தினம் வித்தியாலயம் – மாங்குளம்
மு/பணிக்கன்குளம் அ.த.க பாடசாலை மு/பெரியபுளியம்குளம் அ.த.க பாடசாலை,
மு/கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலை
கிளிநொச்சி அறிவியல் கல்வி நிலையம் ஆகியவற்றை சேர்ந்த, 680 மாணவர்கள், இந்த நிகழ்வின் மூலம் பயனடைந்தனர். அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதுடன், மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவிக்கு மலேசியாவைச் சேர்ந்த SRI MURUGAN- Syarikat Sri Murugan Trading Agency Sdn Bhd Malaysia. நிறுவனத்தின் உரிமையாளர் திரு. Selvan.G அவர்கள் அனுசரணை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வை உலக ஆன்மீக கட்டமைப்பு – WSS அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை கணேஸ்குமார், சுவிட்சர்லாந்து அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.
இந்நிகழ்வில் நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு சிறுவர்களுக்கு நற்செய்திகளையும் ஆசிகளையும் வழங்கி வைத்துள்ளார்.