உலகளாவிய எரிசக்தி சந்தையில் எரிவாயு விலையில் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் அடிப்படை அளவுகோலாகக் கருதப்படும் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.09 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயு (Natural Gas) சந்தையிலும் விலைச் சரிவு பதிவாகியுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.229 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்தும் உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சந்தை நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.