தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக நடிகையும் சமூக ஊடக பிரபலமுமான ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தவெகவில் இணைந்துள்ளேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எப்போது சேர்ந்தேன் என்பது முக்கியமல்ல. அந்த இயக்கத்துக்கு என்னால் இயன்ற ஆதரவை வழங்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.
மேலும், கட்சியின் எதிர்கால செயற்பாடுகளிலும் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இணைவும் அரசியல் தரப்புகளில் கவனம் பெற்றுள்ளது.


