நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவு!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே, 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அநுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் இடைக்கிடை மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.