எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்களகம சுனேத்ராராமய விஹாராதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபையின் செயலாளருமான வணக்கத்திற்குரிய கரபுடுகல இந்தரதன தேரரின் வெசாக் தின சிறப்பு தர்மதேஷன சொற்பொழிவு நடைபெற்றது.
இதன்போது பௌத்த போதனைகளை தொடர்ந்து வெசாக் தினத்தின் முக்கியத்தும் தொடர்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வில் மங்களகம தஹம் பாடசாலை மாணவர்களினால் புத்த பக்தி கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் உட்பட மாவட்ட செயலக உயரதிகாரி தள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது வெசாக் வாரத்தினை முன்னிட்டு விசேட தன்சலும் (பால்சோறு மற்றும் மூளிகை கோப்பி) வழங்கிவைக்கப்பட்டன.


