எருவில் கண்ணகியம்பாள் ஆலயத்தில் பண்ணோடு பாடப்பட்ட பஞ்சபுராணம்.

எருவில் கண்ணகியம்பாள் ஆலயத்தில் பஞ்சபுராணம் பண்ணோடு பாடும் பயிற்சிநெறியானது எருவில் அறநெறி பாடசாலையினால் கண்ணகி அம்பாள் ஆலயத்தில் அறநெறி பாடசாலையின் அதிபர் ந.கனகரெத்தினம் தலைமையில் நடைபெற்றருந்த நிலையில் அதற்கான பரிசில்களும் சான்றிதலும் வழங்கும் நிகழ்வு ஆலயத்தின் வெளி வளாகத்தில் ஆலய தலைவர் மா.சுந்தலிங்கம் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்ணோடு பாடும் பயிற்சி நெறியானது எருவில் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக பயிற்றுவிக்கப்பட்டு அவர்களுக்கு கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் போட்டிகள் நடாத்தப்பட்டு சிறப்பாக பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் ஆலய தலைவர் மா.சுந்தலிங்கம் ஆலய மணியகாhர் சோ.தினகரன்பிள்ளை நிருவாக சபை உறுப்பினர் சா. பரமானந்தம் கலாசார உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.