யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள் நாளை முள்ளிவாய்க்காலில் ஞாயிறு வற்றாப்பளையில்!

( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30) முள்ளிவாய்க்காலை அடைகின்றது.

நாளை மறுநாள் ஒன்பதாம் நாள் (31) ஞாயிற்றுக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைகின்றது.
அங்கு குளிர்த்திச்சடங்கு பார்க்க ஒருநாள் தங்கியிருந்து ஓய்வெடுப்பர்.

ஜெயா வேல்சாமி தலைமையிலான 121 பேர் கொண்ட இந்த பாதயாத்திரை கடந்த 23 ஆம் திகதி சந்நிதியிலிருந்து புறப்பட்டது.

மேலும், வற்றாப்பளையில் 52 அடியார்கள் இந்த யாத்திரை குழுவில் இணைந்து கொள்ள இருப்பதாக இன்று புது குடியிருப்பில் இருந்து ஜெயாவேல்சாமி தெரிவித்தார்.

வள்ளிபுனத்தில் வைத்து சந்நிதி மோகன் சாமி, பாதயாத்திரை அடியார்களுக்கு உணவுப் பொருட்களை இரண்டாம் தடவையாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.