இலங்கையில் வீழ்ச்சி கண்ட தங்கம்!

இலங்கையின் தங்கச் சந்தையில் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (19) 393,000 ரூபாயாக விற்பனையான 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.