தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாட்டில் 50ஆவது பிரதேச மட்ட விழா!

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 50ஆவது பிரதேச மட்ட விழாவின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (15..05.2026) முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கலந்து சிறப்பித்தார்.
குறித்த பிரதேச மட்ட போட்டியில் கபடி, கரப்பந்தாட்டம்,கிரிக்கட்,உதைப் பந்தாட்டம் என பல போட்டிகள் இடம் பெற்ற நிலையில் இறுதி உதைப் பந்தாட்ட போட்டியும் இன்று இடம் பெற்றது இதில் சென்றல் கழகம்,ஈச் கழகம் ஒன்றை ஒன்று எதிர்த்தாடினர் சம்பியனாக சென்றல் கழகம் சம்பியனாக முடி சூடியது.
ஒட்டு மொத்த அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளிலும் வெற்றியீட்டியவர்களுக்கான கழகங்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.