மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு பிரியா விடை!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு நிலை மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியா விடை நிகழ்வு இன்று (11) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பிரியா விடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ ஸனீர் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி ஏ.எம். அமீன் ஆகியோருக்கு வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டு, ஏற்புரையினை தொடர்ந்து இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து பரிசில்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.