திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.
குறித்த மரணம் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் உதய கம்மன்பில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
அதிகாரியின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தகவல்கள் கிடைக்கும் முன்னர் மரணம் போலி தகவல்களை உதய கம்மன்பில வெளியிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.


