நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டிய – வீரம்புவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரம் தொடர்பில், இவர் அண்மையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
குறித்த நிதி மோசடி தொடர்பாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


