( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை மறுநாள் (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் உதவிக்குரு பிரம்மஸ்ரீ பிரபாத் சர்மா உதவியுடன் இவ் வருட அலங்கார மகோற்சவம் நடைபெற்று வந்தது.
ஒன்பது நாட்கள் பகல் திருவிழாவையடுத்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் அம்பாள் சமுத்திர தீர்த்தோற்சவத்திற்காக புறப்பட விடுக்கிறார் என ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.


