வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பில் கலந்துரையாடல்!

(சுமன்)

1976ம் ஆண்டு தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானித்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு தொடர்பிலான மாவட்ட ரீதியாக கலந்துரையாடலில் முதல் கலந்துரையாடல் இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் தலைவரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகள், அருட்பணி ஜெகதாஸ் அடிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, வவுணதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, தாயக செயலணி இணைப்பாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மற்று சங்க உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 2026 மே மாதம் 30ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை முன்னிட்டு, அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.