மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை இன்று(24.04.2026) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நடுவர்கள் போட்டிகளைச் சிறந்த முறையிலும், பக்கச்சார்பற்ற ரீதியிலும் மதிப்பீடு செய்வதற்கான நுட்பங்களைப் பெற்றுக்கொடுப்பதே இப்பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.
பாட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் அவர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி கல்விப் பணிப்பாளர்களான பு.திவிதரன், திருமதி.க. சுவாகரன், திருமதி.தே.உதயகரன், கணக்காளர் வி.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் யுவராஜன் அவர்கள் வளவாளராகப் பங்கேற்று, போட்டி விதிமுறைகள் மற்றும் புள்ளிகள் வழங்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்குச் செயல்பாட்டு ரீதியான தெளிவூட்டல்களை வழங்கினார். சிறந்த நடுவனப் பண்புகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த இப்பயிற்சியின் நிறைவில், ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.








