எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் (24) இன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம், மாதாந்த முன்னேற்ற மீளாய்வு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9820 மாற்றுத் திறனாளிகளின் முழுமையான தரவுகள் தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படவுள்ளன.
மாவட்டத்தில் 9022 நபர்கள் அங்கவீனமுற்றோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் மாதாந்த நலன்புரி கொடுப்பணவுகள் பெற்று வருகின்றனர்.
இத் தரவுத்தளத்தினை உருவாக்குவதற்கான நிதி அனுசரனை மெதடிஸ்த செர்ச் புகலிடம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்
வடக்கு மற்றும் கிழக்கிற்கான திருமாவட்ட சபை தலைவர் அருட்பணி சமுவேல் சுபேந்திரன், புகலிடம் நிறுவன பிரதிநிதிகள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மாற்று மாற்று திறனாளிகள் ஒன்றிய தலைவர் எஸ்.அருள்ராஜ், மாற்று திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


