நேற்று நாவிதன்வெளியில் களைகட்டிய சித்திரைக் கொண்டாட்டம் !

( வி.ரி. சகாதேவராஜா)

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலக வளாகத்தில்
நடைபெற்ற இப்பெரு விழாவில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.தர்மதாஸ உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
.
தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தையும் சித்திரை புத்தாண்டின் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

மேலும், பொதுமக்கள் கலந்து கொண்டு இனிதாகக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.