சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (23) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
எனினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக, இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடிய அதிக வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


