எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
9 மணித்தியால பாரிய பிரயத்தனத்தின் பின்னர் மட்டக்களப்பு மாந்தீவில் நீண்ட நாட்களாக சஞ்சரித்திருந்த 6 காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியை அண்டிய மாந்தீவில் தொடர்ச்சியாக சஞ்சரித்து வரும் காட்டு யானை கூட்டத்தினால் அப்பகுதியை அண்டிய திருப்பெருந்துறை, விளாவெட்டுவான், மங்கிக் கட்டு, கன்னன்குடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமத்தினை எதிர்நோக்கி வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களது மேற்பார்வையின் கீழ் வன ஜீவராஜிகள் திணைக்க அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஒன்பது மணித்தியால பிரயர்த்தனத்தின் பின்னர் 6 காட்டு யானைகள் வனப்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


