ஈரான், அமெரிக்க போரால் இலங்கையும் பொருளாதாரத்தால் பாதிக்கும் நமக்கு நாமே துணையாக மாறவேண்டும்..

இ.சுதாகரன்

ஈரான், அமெரிக்க போரால் இலங்கையும் பொருளாதாரத்தால் பாதிக்கும் நமக்கு நாமே துணையாக மாறவேண்டும்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர் தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்களால் அது இலங்கைக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது எனவே நமக்கு நாமே பொருளாதாரத்தை கட்டி எழுப்பைம் வல்லமையை தேடவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக களம் இறங்கியவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த (04/03/2026) இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகாமையில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூழ்கடித்த செய்தி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மேலும், இந்த தாக்குதலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
இந்த தாக்குதலால் கப்பல் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்படின் மேலும் இலங்கைக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் தோன்ற வாய்ப்புள்ளது.

போர் மோதல்கள் காரணமாக இதுவரை மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்திருந்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து கடந்த வாரம் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
“நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், புறப்படவிருந்த 98 விமானங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, இலங்கையிலுள்ள தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்புக்காக விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் பத்து இலட்சம் இலங்கைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,
இந்த விவகாரங்கள் மிகவும் அவசரமானவை என்பதால், அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பல நாடுகளிலுள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளார்கள் என்றே கூறலாம்.
ஏனென்றால் பல மத்தியகிழக்கு நாடுகளில் தமது உறவுகள் கல்விக்காக வேலைக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் நிலை குறித்து மற்றைய நாடுகளிலுள்ள மக்கள் கவலையில் உள்ளனர்.

உக்கிரமான போர் தொடர்வதால் இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படலாம், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள, மருத்துவ மருந்துப்பொருட்களுக்கும் சிலவேளைகளில் தொடர்சியாக கடல் மார்க்கப்போக்குவரத்துக்களும், விமானப்போக்குவரத்துக்களும் தடைகள் ஏற்படுமானால் பாரிய பொருளாதார நெருக்கடிகளை இலங்கை சந்திக்க கூடிய வாய்புகள் ஏற்படலாம் என்பது உண்மை.

ஆனால் இலங்கை ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சர்கள் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது தேவையான அளவு எரிபொருட்கள் உள்ளன என்று அடிக்கடி கூறுவதுடன் எருபொருட்களை வாகனங்களில் மட்டுமே (டீசல், பெற்றோல்) வினியோகிக்குமாறு எரிபொருள் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் பட்டாலும் பொதுமக்கள் வாகனங்களில் எரிபொருட்களை நிரப்பி சிலர் வீடுகளில் சேமித்து வைக்கும் செயல்களும் பல மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது.
இதற்காக விசேட கண்காணிப்புக்காக பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

இந்தப்போராட்டம் தொடர்பாக இலங்கை மக்கள் ஒருசாரார், மற்றும் அரசியல் வாதிகள் சிலர் அமரிக்கா. இஷ்ரேலுக்கு ஆதரவாகவும், இன்னும் சிலர் ஈரானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறிவருவதை அவதானிக்க முடிகிறது.

ஈழத்தமிழர்களை பொறுத்தவரை இந்த உலக நாடுகளின் போர் தொடர்பாக எந்த நாடு நல்லது எந்தநாடு கெட்டது என்ற கருத்துக்களை கூறிவருவதை தவிர்த்து

இந்த இருநாடுகள் மோதலில் அமரிக்காவுக்கு ஆதரவாக இஷ்ரேல்,மத்தியகிழ்கு உட்பட சிலநாடுகளும் ,
ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உட்பட சிலநாடுகளும் ஆதரவாக உள்ளன.

இலங்கையில் உள்ள சிங்கள, முஷ்லிம் தலைவர்கள் பலர் ஈரானுக்கு ஆதரவாகவும், அமரிக்கா, இஷரேலுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறியுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான இனப்படுகொலையாளர்களான மகிந்த, ரணில், மற்றும் மகிந்தவின் மகன் நாமல் மற்றும் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் தலைவர் ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரஷ் தலைவர் றிசாட் பதியுதீன் இப்படி சிலரை பார்க்கலாம்..

ஈரான் தலைவர்களின் மறைவுக்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வ
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி அநுர இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

இந்த உலக வல்லரசுகளின் போர் தொடர்பாக ஈழத்தமிழர்கள் அறியவேண்டியது, அல்லது சிந்திக்க வேண்டியது கடந்த 2006, தொடக்கம் இறுதி யுத்த காலத்தில் 2009, மே,18, வரை இலங்கைக்கு ஆதரவாக முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் இனப்படுகொலைக்கு உதவிய முக்கிய நாடுகளே எதிரும் புதிருமாக மோதிவருகின்றனர் இதில் எந்த நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை, மாறாக இராணுவ, போர்தளபாட, விமான, தடைசெய்யப்பட்ட குண்டுகள், போரியல் திட்டங்கள் எல்லாமே இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகள்தான் இப்போது எதிரும் புதிருமாக மோதிக்கொள்கின்றனர்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போர் காலத்தில்
இந்தியா,பாகிஷத்தான்,சீனா,இஷ்ரேல்,அமரிக்க்கா,லண்டன்,ரஷ்யா,ஈரான்உக்ரைன், செக்குடியரசு,மத்தியகிழக்கு நாடுகள் உட்பட்பல நாடுகள் இலங்கை அரசுக்கு இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள்தான்
இன்று தமக்குள் மோதி அவர்களும் அவர்களுடைய பொருளாதார வழங்களும் அழிந்துகொண்டிருக்கின்றது.

சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை ஈழத்தமிழர்களுக்கு இதுவரை எந்த நீதியையும் வழங்க மறுத்தனர் இன்று அவர்களுக்குள்ளே நீதியையும், தண்டனைகளையும் இறைவனால் வழங்கிக்கொண்டிருக்கின்றது என்பதைத்தான் கூறமுடிகிறது.

இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம்(23/02/2026) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.

ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர்
இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலைப்பாடு மற்றும் சிவில் அரசியல் பொருளாதார உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது

இதேவேளை ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய ஈரான், அமரிக்க மோதலால் இந்த கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை விடயம் முதன்மைப்படுத்தப்படுவதும் தாமதமாகலாம் என்பதும் உண்மை எனவும் கூறினார்.