வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு!
மட்டக்களப்பு,வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு இன்று (13.04.2026) திங்கட்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.
சித்திரை வருடப்பிறப்பை நாளை(14.04.2026)ஆம் திகதி வரவேற்கும் முகமாக, ஆலய நிருவாக சபையினரின் சிறப்பான ஏற்பாட்டில் இந்த மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி பல்வேறு மூலிகைத் திரவியங்கள் சேகரிக்கப்பட்டு, முறைப்படி மருத்துநீர் காய்ச்சப்பட்டது.
இந்நிகழ்வின் போது ஆலயத்தில் காலை விசேட பூசைகளும் இடம்பெற்றன.


