காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் திறப்பு

( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் இன்று (13) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காரைதீவின் முதலாவது யூனானி மருத்துவர் திருமதி உமா ரமணன் டிலக்ஷனா இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.

விஷ்ணு ஆலய சிவாச்சாரியார் சிவஸ்ரீ தியாகராஜ குருக்களின் சமய கிரியைகளுடன் சுப வேளையில் இப் பிரத்தியேக நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, சட்டத்தரணி இ.ரகுபதி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.